வேளாண்மை துறையின் விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு பயிற்சி
நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் பரமத்தி அருகே கீரம்பூரில் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு பயிற்சி வழங்கப்பட்டது;
பயிற்சி
நாமக்கல் மாவட்டம்., உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை துணை இயக்குநர் கோவிந்தசாமி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம் உள்பட பல முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது.
வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, முக்கிய திட்டங்களில் உள்ள இடைவெளியினை குறைக்கும் வகையில் விவசாயிகளின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்திடவும் அவர்களின் வருமானத்தை உயர்த்திடவும் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய “மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுத்தப் படுகின்றது என்று விளக்கமளித்து பயிற்சி வழங்கினர்.