குப்பைக்கு சென்ற தக்காளியால் விவசாயிகள் வேதனை
ஒரு கிலோ ரூ.10க்கு மட்டும் விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-19 06:48 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, இடையகோட்டை, மூலச்சத்திரம், வடகாடு, கேதையெறும்பு, பால்கடை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் அதிகளவு தக்காளி பயிரிடப்பட்டது. தக்காளி தற்போது அதிகளவு விலைச்சல் அடைந்துள்ளது.வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் ரூ.350க்கு விற்கப்பட்ட 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80முதல் ரூ.100 வரை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ ரூ.10க்கு மட்டும் விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பறிப்பு கூலி மற்றும் மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் சரக்கு வேன் வாடகை கட்டணத்திற்கு கூட கட்டுபடியாகாததால் தக்காளிகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர்.