தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்
கட்டணமின்றி வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அனுமதியளித்த தமிழக முதல்வருக்கு பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களிலிருந்து, கட்டணமின்றி வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அனுமதியளித்த தமிழக முதல்வருக்கு பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். மாநிலமெங்கும் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களிலிருந்து, வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அனுமதித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
இது குறித்து பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில விவசாயிகள் சங்க செயலாளர் ராஜாசிதம்பரம் தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கு எளிதாக வண்டல் மண் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. கிராம மக்களிடையே தொடர்புடைய வருவாய் துறை அதிகாரிகள் மூலமாகவே மிக எளிதாக களி மண், வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என்றும், எங்களுக்கு அருகாமையில் உள்ள ஏரிகளிலே மண் எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மழைக்காலத்தில் விவசாயிகள் மண் அள்ளும் பொழுது நீர் தேங்குவதற்கு பெரிய வாய்ப்பாக இருக்கும், அனுமதியை எப்படி வாங்குவது என்று தெரியாமல் இருந்த இந்த நேரத்தில் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு விவசாயிகளை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது.
இந்த உத்தரவை பிறப்பித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி என தெரிவித்தார். மாநில விவசாயிகள் சங்க துணைத்தலைவர் செல்லத்துரை தெரிவிக்கையில், , பெரம்பலூர் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும், மழை காலங்களில் ஏரிகளில் அதிக நீரை சேமித்து வைக்க இயலாமல் இருந்தன. இந்த அறிவிப்பு விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்கும், நல்ல முறையில் பயிர் செய்வதற்கும், அதிக மகசூல் பெற்று விவசாயம் செழிப்பதற்கு பெரிய வாய்ப்பாக இருக்கும் விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் அழிக்ககூடிய, விவசாயிகளின் வாழ்விற்கு ஒரு நல்ல வழிகாட்டியாக திகழும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைத்து விவசாயிகளின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்தார்.