விவசாயிகள் பயிற்சி முகாம்!
புதுக்கோட்டை: புதுகை வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரி வாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத் தின் கீழ் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல் தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் வண்ணாரப்பட்டி கிராமத்தில் நடந்தது.

வேளாண்மை உதவி இயக்குநர் அன்பரசன் தலைமை வகித்து வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் நோக்கம், மானியங்கள், நுண் ணீர் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம ளித்தார்.
வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) ஜெயபாலன், மாவட்ட வேளாண்மை தரக்கட்டுப்பாடு அலுவலர் முகமது ரபீக் ஆகியோர் வேளாண்மையில் மண்வளத்தை மேம்படுத்துவதற்கு பசுந்தாள் உரங்கள், பசுந்தளை உரங்கள், பண்ணை கழிவுகள், தென்னை நார் கழி வுகள், உயிர் உரங்கள் மற்றும் மண்புழு உரங்களை பயன்படுத்தி மண்வளத்தை மேம்படுத்தி வேளாண்மை பணிகளை மேற்கொள்ளலாம் என்றனர்.
குடுமியான் மலை வேளாண்மை அலுவலர் பாக்கியலட்சுமி, விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய வேண்டிய தன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். அட்மா வட் டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் கலியமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
பயிற்சியில் 40 விவசாயிகள் பங்கேற்றனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தஜோதி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சரவ ணன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருளரசு, ஸ்ரீநிதி ஆகியோர் செய்திருந்தனர்.