கரும்புகளை பறிகொடுத்த விவசாயிகள் கண்ணீர்!
Update: 2024-01-12 11:21 GMT
கரும்புகள் சேதம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, விவசாயிகள் அதிகபரப்பில் கரும்பு பயிரிடுவது வழக்கம். நிகழாண்டும் அதேபோல ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்தது. மிதமான மழை பெய்து வந்த நிலையில் ஜனவரி 9ம் தேதி காலை முதல் தொடர்ந்து 4 மணி கனமழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் சாய்ந்தன. மேலும் எறும்பு, அணில், மயில் உள்ளிட்டவைகளிடமிருந்து கரும்பு கட்டையை காப்பாற்றி கொண்டு வருவதற்கு போதும் போதும் என ஆகிவிடுகிறது. இவ்வளவு சிரமங்களையும் தாண்டி பயிரிட்டு அறுவடை செய்து விலை மட்டும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். தகுந்த நிவாரண தொகை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.