தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது .
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் ஜனவரி 27ஆம் தேதி காலை முதல் தொடங்கி நடைபெற்றது , தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் மாவட்ட தலைவர் சந்திரசேகர், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அருள்ஜோதி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பாளர் சின்னசாமி ஆகியோர் தலைமையில் கூட்டாக நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்மாநிலத் துணைச் செயலாளர் ராஜேந்திரன் கலந்துகொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் நம்பிராஜன் கலந்து கொண்டு உண்ணாவிரத பேருரையாற்றினார், இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 12 அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசுக்கு வலியுறுத்தி, கோஷமிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை உடனடியாக நிறைவேற்ற கோரி போராட்டங்கள் செய்த நிலையில், அரசு செவி சாய்க்கவில்லை என்பதால் தற்போது அறப்போராட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக் உள்ளதாகவும் இதில் ஆசிரியர்களுடைய ஊதியத்தை மத்திய அரசுக்கு இணையாக வழங்க வேண்டும் CPS - சை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிதாக அறிவிக்கப்பட்ட 243 அரசாணையான மத்திய அரசின் முன்னுரிமை தொடர வேண்டும்.
மாநில முன்னுரிமைகள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும், என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதன் மூலம் தலைவர்களை அழைத்து பேசி தீர்வு காண விட்டாள் டிட்டோஜாக் உயர் மட்ட குழுவினர்கள் ஒன்று கூடி பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டுள்ள மறியல் போராட்டத்திற்கு ஆசிரியர்களை தயார் செய்வோம் என்பதனை இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணைச் செயலாளர் மணிவண்ணன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் செல்வராஜ் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் மதியழகன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் புகழேந்தி தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொருளாளர் செல்லதுரை மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமிர்தம் மாநில பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா மேரி தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைமை நிலைய செயலாளர் துரைராஜ், உள்ளிட்ட டிடோஜாக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.