மகன்களிடமிருந்து சொத்தை மீட்டு தரக்கோரி தந்தை தர்ணா

சொத்தை எழுதி வாங்கி விட்டு விரட்டியத்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-04-24 06:51 GMT

அம்மாசைப்பன்

கோவை சுங்கம் பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் அம்மாசைப்பன் (வயது 80). மோட்டார் கம்பனி நடத்தி வந்துள்ளார்.இவருக்கு செந்தில்குமார்,ரவிக்குமார் ஆகிய இரண்டு மகன்களும் மகேஸ்வரி,சூர்யா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.இந்நிலையில் தனக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான சொத்துகளை மகன்கள் மோசடியாக எழுதி வாங்கிவிட்டு விரட்டியடிததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலிசார் மனு அளிக்க அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர்.

இது குறித்து பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது மகன்கள் தனக்கு சொந்தமான சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 40 செண்ட் நிலத்தை எழுதி வாங்கியதாகவும் அதில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி தருவதாக கூறி மோசடியாக எழுதி வாங்கிய நிலையில் இது தொடர்பாக வழக்கு நடந்து வரும் நிலையில் மகன்கள் தன்னை தாக்கி வெளியேறுமாறு மிரட்டியதாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் ஆனால் மீண்டும் தனது மகன்கள் தன்னை தாக்கி தற்போது குடியிருக்கு வீட்டை இடிக்க வந்துள்ளதாக கூறி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது சொத்தை மீட்டுத்தர வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News