கல்லூரியில் சேர பணம் தர மறுத்த தந்தை - மாணவர் தற்கொலை

கல்லூரியில் சேர முடியாத விரக்தியில் பீகார் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-05-30 03:50 GMT

பைல் படம் 

பீகார் மாநிலத்தை சேர்ந்த நரேஷ்குமார் என்ற டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திற்கு வந்தார். அவர் சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மகன்களில் ஒருவரான பவன்குமார் (வயது 20), சேலம் கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்தார். அதன்பிறகு அவருக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என ஆசை இருந்தது.

இதுகுறித்து அவர் தனது தந்தையிடம் கூறியபோது, அவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை எனவும், அடுத்த ஆண்டு (2024) கல்லூரியில் சேர்த்து விடுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தனது தந்தையுடன் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு பவன்குமார் சென்று வந்தார். இதனிடையே, தற்போது ஏற்கனவே கூறியபடி தன்னை கல்லூரியில் சேர்த்துவிடும்படி பவன்குமார் தந்தையிடம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பணம் இல்லாததால் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த பவன்குமார், தந்தையுடன் வேலைக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் தந்தையிடம் கல்லூரியில் சேர்த்துவிடுமாறு கேட்டபோது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் விரக்தி அடைந்த பவன்குமார் வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பவன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News