சாலமங்கலத்தில் வண்ணம் பூசாத வேகத்தடையால் அச்சம்
சாலமங்கலத்தில் வண்ணம் பூசாத வேகத்தடையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம், படப்பை அடுத்த, சாலமங்கலம் கிராமத்தில் இருந்து, நரியம்பாக்கம் செல்லும் சாலை உள்ளது. வண்டலுார் - - வாலாஜாபாத் மாநில நெடுஞ்சாலையில் இருந்து, 2.5 கி.மீ., செல்லும் இந்த சாலை, குண்டும் குழியுமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இ
தையடுத்து, முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1.24 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு மாதத்திற்கு முன் சாலை சீரமைக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் வேகமாக செல்வர் என்பதால், விபத்து ஏற்படுவதை தடுக்க, இந்த சாலையில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், வேகத்தடைகள் மீது வண்ணம் பூசப்படாததால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெண்கள் மற்றும் வயதானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகள், வேகத்தடை எங்குள்ளது என தெரியாமல்,
அதில் ஏறி, நிலை தடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே, இச்சாலையில்உள்ள வேகத்தடைகள் மீது வண்ணம் பூச, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்."