உளுந்து பயிர் காப்பீட்டிற்கு பிப்.15 கடைசி நாள்

கீழ்வேளூர் வட்டத்தில் உளுந்து பயிர் காப்பீடு செய்ய வருகிற 15ஆம் தேதி கடைசி நாள் என வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-02-13 08:13 GMT

உளுந்து பயிர் 

கீழ்வேளூர் வேளாண் உதவி இயக்குனர் தெய்வேந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டாரத்தில் சம்பா தாளடி  சாகுபடி முடிந்த வயல்களில் உளுந்து பயறு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் வகைகள் மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளாலும் பூச்சி நோய் தாக்கப்பட்டாலும் விவசாயிகளை பாதுகாப்பதற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

அதன்படி ஒரு ஏக்கருக்கு ரூபாய் 82 பிரிமியமாக செலுத்த வேண்டும். இந்த பிரிமியர் தொகையை செலுத்த வருகிற 15ஆம் தேதி கடைசி நாள் ஆகும். நடப்பாண்டில் மழையால் இயற்கை சேதங்கள் ஏற்பட்டு விட்டால் அதன் பின்னர் பயிர் காப்பீடு செய்ய இயலாது.  எனவே விண்ணப்பம் மற்றும் முன்மொழிவு படிவம் ,வங்கி கணக்கு புத்தக முதற்பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா அடங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பொது சேவை மையங்கள் வழியாக பிரிமியம் செலுத்தி பயறு வகைகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News