சாத்தூர் அருகே உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு உதவிய சக காவலர்கள்
சாத்தூர் அருகே உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் உதவினர்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிப் புத்தூர் அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் என்பவரின் மகன் ராஜேஸ்வரன் (32). இவர் நரிக்குடி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 16ம் தேதி காவலர் ராஜேஸ்வரன் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வரும் போது எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் காவலர் ராஜேஸ்வரனுடன் 2013 ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்த காவலர்கள் அனைவரும் டெலிகிராம் மற்றும் வாஸ்ட் அப் போன்ற சமுக வலைதளங்களில் ஒன்றினைந்து சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் ராஜேஸ்வரன் குடும்பத்திற்கு 22 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில் சாத்தூரில் உள்ள உயிரிழந்த காவலர் ராஜேஸ்வரன் வீட்டிற்கு சென்ற காவலர்கள் ராஜேஸ்வரன் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் ராஜேஸ்வரன் மனைவியிடம் 22 லட்ச ரூபாய்க்கான சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் இன்சூரன்ஸ் திட்டத்திற்கான புத்தகங்களை வழங்கினார்கள்.