திருவண்ணாமலை கோவிலில் பெண் பக்தர் மரணம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெண் பக்தர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.;

Update: 2024-03-29 13:38 GMT
பெண் பக்தர் மரணம் 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெண் பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.சிகிச்சை பலனின்றி பெண் பக்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல கடந்த 24-ந்தேதி பக்தர் ஒருவர் உயிரிழந்தார். ஒரே வாரத்தில் 2 பேர் உயிரிழந்ததால் உரிய பரிகார பூஜை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News