கலெக்டர் அலுவலகம் முன்பு  குடும்பத்துடன் பெண் தர்ணா

நிலத்தகராறில் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய கோரி ஓரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-25 07:57 GMT
இரவில் தர்ணா நடத்திய குடும்பம்
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை கிருஷ்ணன் புதூரை சேர்ந்தவர் லதா (43). இவர் நேற்று இரவு எட்டு மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் வந்து தனது இரண்டு மகன்கள் மற்றும் தாயாருடன் அலுவலக நுழைவாயிலின் முன் அமர்ந்து தர்ணா செய்தார்.      இது பற்றி அவர் கூறியதாவது :- நான் பால் வியாபாரம் செய்து வருகிறேன். எங்களது சொந்தமான 5 சென்ட் நிலம் தொடர்பான வழக்கு பூதப்பாண்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் எங்கள் நிலத்துக்கு உரிமை கோரும் 4 பேர் நேற்று முன்தினம் கூலிப்படையுடன் எங்கள் வீட்டிற்கு வந்து என்னையும் என் தாயாரையும் தாக்கினார்கள்.      வீட்டில் இருந்த பொருட்களை லாரியில் ஏற்றி சென்றனர். மேலும் ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தீ வைத்ததோடு பொக்லைன் இயந்திரத்தின் மூலமாக எனது வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கியதுடன், கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.  ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கலெக்டர் அலுவலகம் முன்பு இரவில் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேசமணி நகர் போலீசார் விரைந்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
Tags:    

Similar News