பெண் தற்கொலைக்கு முயற்சி
திருப்பத்தூர் மாவட்டம், புதுக்கோட்டை உடல்நல கோளாற்றால் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-12 07:27 GMT
தற்கொலை முயற்சி
திருப்பத்தூர் மாவட்டம், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த காந்தி மனைவி புனிதா வயது 37 இவர் தீராத வயிற்று வலியால் அவதி உற்று வந்தார் இந்த நிலையில் வயிற்று வலி அதிகமாக மனம் உடைந்த புனிதா வீட்டில் வைத்திருந்த மாத்திரையை சாப்பிட்ட மயங்கி உள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.