குடும்ப தகராற்றில் பெண் தற்கொலை
கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியில் குடும்ப தகராற்றில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் எல்லைக்குட்பட்ட, சேலம் பைபாஸ் ரோடு, ஸ்ப்ரிங் பீல்டு பகுதியில் வசித்து வந்தவர் பிருத்திவி மனைவி தேவி அகிலாண்டேஸ்வரி வயது 50. கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் மே 18ஆம் தேதி இரவு 8:20 மணியளவில், மீண்டும் இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறில் விரக்தி அடைந்த, தேவி அகிலாண்டேஸ்வரி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அறிந்த பிருத்திவி இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், உயிரிழந்த தேவி அகிலாண்டேஸ்வரி உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.