லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் !
லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-13 07:32 GMT
பணியிடை நீக்கம்
சேலம் மாவட்டம் தும்பல்பட்டி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் பாலம்மாள். அதே பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பிகளான அரவிந்த், அஜித்குமார் ஆகியோர் பட்டா மாறுதல் கேட்டு கிராம நிர்வாக அதிகாரியிடம் விண்ணப்பித்தனர். அதற்கு பட்டா வழங்க அவர்களிடம் லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாதவர்கள் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலம்மாளை கைது செய்தனர். இந்த நிலையில் லஞ்ச வழக்கில் கைதான கிராம நிர்வாக அதிகாரி பாலம்மாளை பணியிடை நீக்கம் செய்து உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் உத்தரவிட்டுள்ளார்.