லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா !
பழனி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா துவங்கி உள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-16 06:08 GMT
சித்திரை திருவிழா
பழனி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா துவங்கி உள்ளது. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு இலட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் திருத்தேர் சிற்ப ஆகமப்படி புனரமைக்கப்பட்டுள்ளது. இன்று திருத்தேர் வெள்ளோட்ட விழாவின் 2-ம்கால வேள்வி பூஜை நடைபெற்று, தொடர்ந்து திருத்தேர் வழிபாடு, தேர்க்கால் வழிபாடு, தேர்வடம் தொட்டு இழுத்தல் ஆகியவை நடைபெற்று, தேர் வீதி வலம் வந்தது. பழநி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் சித்திரைத் திருவிழா முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.