மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது.
Update: 2024-03-19 15:04 GMT
பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 10 ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு திகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. 17 ஆம் தேதி இரவு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினந்தோறும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றியும் வருகின்றனர். இன்று நடைபெற்ற பூஜையில் மாரியம்மன் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.