ரிஷிவந்தியம் அரசு கலை, கல்லூரியில் முப்பெரும் விழா

ரிஷிவந்தியம் அரசு கலை, கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.

Update: 2024-05-02 08:28 GMT

ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் முப்பெரும் விழா நடந்தது.


ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் முப்பெரும் விழா நடந்தது. வாணாபுரம் அடுத்த அரியலுாரில் தற்காலிகமாக இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உயர்கல்வி சார்ந்த கல்வி, வேலைவாய்ப்பில் மாணவர்களின் நலனை மேன்மேலும் முன்னெடுத்தல், கல்லுாரி வளர்ச்சிக்கு வித்திடல் மற்றும் பரிசு வழங்குதல் என முப்பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

தமிழ்த்துறை தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். உதவிபேராசிரியர் ஜெகநாதன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளுவர் பல்கலைகழக முன்னாள் பதிவாளர் சையத்ஷபி பங்கேற்று, உயர்கல்வியில் உள்ள வேலைவாய்ப்புகளும், தமிழ்த்துறை மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் பேசினார்.

தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் தமிழ்த்துறை சார்பில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், கல்லுாரியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மூன்றாமாண்டு மாணவர்கள் பாதுகாப்பு பெட்டகத்தை நினைவு பரிசாக வழங்கினர்.

Tags:    

Similar News