ஹோலி பண்டிகை; ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கம்
ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Update: 2024-03-23 06:24 GMT
ஹோலி பண்டிகை வருகிற 25-ந்தேதி நாடு முழுவதும் கொண் டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி வண்டி எண்:06051 சென்னை எழும்பூர் - நெல்லை சிறப்பு ரெயில் இன்று (சனிக்கிழமை) இரவு II.45 மணிக்கு சென்னை எழும் பூரில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரெயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி,திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர். கோவில்பட்டி, நெல்லை வழிதடங்கள் வழியாக இயங்கும். இதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண்: 06052 நெல்லை - சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி இரவு 10 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 10.05 மணிக்கு சென்றடையும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.