சிவகாசியில் பங்குனி பொங்கலை முன்னிட்டு நாளை தெப்போற்சவ திருவிழா...

சிவகாசி ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நிறைவு..நாளை, தெப்போற்சவம் திருவிழா.....

Update: 2024-04-15 05:52 GMT
தெப்போற்சவ திருவிழா
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த இரண்டு வாரங்களாக உற்சாகமாக நடைபெற்று வந்தது.ஸ்ரீமாரியம்மன் எழுந்தருளிய பெரிய தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து,ஸ்ரீமாரியம்மன் 'அன்னம்' வாகனத்தில் எழுந்தருளி,தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இன்று மாலை மஞ்சள் நீராட்டத்துடன், பங்குனி பொங்கல் திருவிழாவிற்காக கோவிலில் ஏற்றப்பட்ட கொடி இறக்கப்படும். மேலும் இன்று மாலை, ஸ்ரீபத்திரகாளியம்மன் மற்றும் ஸ்ரீமாரியம்மன் சுவாமிகள் இருவரும் கடைக்கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் 'தங்க ஊஞ்சலில்'எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.இதனை தொடர்ந்து இன்று இரவு, ஸ்ரீபத்திரகாளியம்மன் மற்றும் ஸ்ரீமாரியம்மன் சுவாமிகள் இருவரும் 'வெள்ளி ரிஷப' வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.திருவிழா நிறைவு பெற்ற மறுநாளான நாளை 16ம் தேதி (செவ்வாய் கிழமை) இரவு,ஸ்ரீமாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில், தெப்போற்சவம் திருவிழா நடைபெறுகிறது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News