வாக்கு எண்ணிக்கை மையத்தில் இறுதி கட்ட ஆய்வு

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணிக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்:- வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் தேர்தல் பொதுப் பார்வையாளர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு

Update: 2024-06-02 13:06 GMT

அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு ஏப்.19-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 10,83,243 (70.09 சதவீதம்) வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜீன்-4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதை முன்னிட்டு 102 வாக்கு எண்ணும் அலுவலர்கள், 111 நுண்பார்வையாளர்கள், 102 உதவியாளர்கள் மற்றும் 593 காவலர்கள் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, தேர்தல் பொது பார்வையாளர் கன்ஹீராஸ் ஹச் பகதே மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News