மதுராந்தகம் நகரில் கலை கட்டிய இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்

மதுராந்தகம் நகரில் 50 டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள் என ஆயிரம் பேர் அணிவகுத்து திமுகவினர் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

Update: 2024-04-17 15:02 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜி. செல்வம் அவர்களை ஆதரித்து மதுராந்தகம் நகர திமுக சார்பில் நகர கழக செயலாளர் குமார்அவர்கள் ஏற்பாட்டில் விவசாயிகள் 50 டிராக்டர், நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம், மாட்டு வண்டியில் பயணம் செய்தவாறு சுமார் 1000 -க்கும் மேற்பட்டோர் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News