நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குடும்பத்துடன் வாக்களிப்பு
காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது குடும்பத்துடன் சேர்ந்து வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்.
காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது குடும்பத்துடன் சேர்ந்து வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார். நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழக முழுவதும் இன்று காலை 7 மணி முதல் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் திமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கட்சி வேட்பாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வரும் நிலையில் அதன்படி தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மல்லாங்கிணறு அரசு தொடக்கப் பள்ளியில் தனது மனைவி மணிமேகலை மற்றும் இரண்டு மகள்களுடன் தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி வரை நடந்து வந்து வாக்கினை செலுத்தி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
அதற்குப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நிதியமைச்சர் அமைச்சர் பேசுகையில் நாட்டு மக்கள் இந்த தேர்தலில் தெளிவான தீர்ப்பு வழங்க இருப்பதாகவும், தமிழக முதல்வரின் கடந்த மூன்று ஆண்டு நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கும் விதமாக இந்த தேர்தல் முடிவு இருக்கும் எனவும் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கு ஆதரவாக காலை முதல் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாக்களித்து வருவதாகவும், ஒன்றியத்தில் இந்த தேர்தலின் முடிவு பெறும் மாற்றத்தை கொண்டு வரும் எனவும் கூறினார்.
நிதியமைச்சர் அவர்களின் இளைய மகள் இதயா முதல் முறையாக வாக்களித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த போது. முதல் முறையாக வாக்களிப்பது மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பெருமையாகவும் இருப்பதாகவும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் தாயகம் திரும்பிய பின்பு முதல் முறையாக வாக்களித்து இருப்பதாகவும் அவருடைய மகள் கூறினார்.