தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விசிக சார்பில் நிதியுதவி !
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விசிக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
பரவாய் கிராமத்தில் கடந்த 23.06.2024 அன்று சம்பத்-பானுமதி இவர்களின் வீடு கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீவிபத்தில் வீடு முற்றிலும் எரிந்து வீட்டில் இருந்த அனைத்து உடைமைகளும் எரிந்தது.. இதனையறிந்த விசிக தலைவர் தொல் திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் உத்தரவின்படி பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் பாதிக்கப்பட்ட பானுமதி குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார்.
இந்நிகழ்வின் போது முன்னாள் மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் மு.உதயகுமார் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.நந்தன் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இரா.வரதராஜன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்சஸ் சாமி ஓலைப்பாடி சுருளிராஜன் அசூர் பெரியசாமி பரவாய் கிளை செயலாளர் மகாதேவன் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். பின்னர் பரவாய் கிராம நிர்வாக அலுவலர் அவர்களை சந்தித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வழங்கும் நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.