மறைந்த ஒன்றிய திமுக நிர்வாகிகள் குடும்பத்திற்கு நிதியுதவி

ராஜேஸ்குமார் எம்பி கல்வி உதவித்தொகை மற்றும் மறைந்த கழக நிர்வாகிகள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினார்.;

Update: 2024-03-07 13:55 GMT

நிதியுதவி அளிப்பு

நாமக்கல் மாவட்ட கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் குடும்பத்தில் மறைந்த கழக உறுப்பினர்கள் குடும்பத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் குடும்ப நிதி உதவி மற்றும் திமுக உறுப்பினர்களின் குழந்தைக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல்- முல்லை நகரில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் பழனிவேல் வரவேற்றார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே. ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி கலந்துகொண்டு கல்வி உதவித்தொகை மற்றும் மறைந்த கழக நிர்வாகிகள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினார்.

Advertisement

இந்நிகழ்ச்சியில்பொதுக்குழு உறுப்பினர், கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொன். சித்தார்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி,

மாவட்ட பிரதிநிதிகள் மணி, ரவி ,பொருளாளர் கணேசன், துணைச் செயலாளர் அருள், ஜாக்லின் மேரி வெங்கடேஷ், கிளை செயலாளர் ராஜவேல், இளைஞரணி ரகுபதி மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News