வீடு இடிந்து உயிரிழந்த தொழிலாளி மனைவிக்கு நிதியுதவி

அன்னதானப்பட்டியில் வீடு இடிந்து உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் உதவியை, கலெக்டர் பிருந்தாதேவி வழங்க உத்தரவிட்டார்.;

Update: 2024-05-25 06:26 GMT
வீடு இடிந்து உயிரிழந்த தொழிலாளி மனைவிக்கு நிதியுதவி

   அன்னதானப்பட்டியில் வீடு இடிந்து உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் உதவியை, கலெக்டர் பிருந்தாதேவி வழங்க உத்தரவிட்டார். 

  • whatsapp icon
சேலம் அன்னதானப்பட்டி கண்ணகி தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் (வயது 56). தொழிலாளி. இவர் ேநற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாட்டில் சிக்கி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு பேரிடர் மேலாண்மை நிதி ரூ.4 லட்சம் வழங்க உதவி கலெக்டர், தாசில்தார் ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதையடுத்து இறந்த செந்தமிழ் மனைவி கார்த்திகேஸ்வரிக்கு பேரிடர் மேலாண்மை நிதி ரூ.4 லட்சம் வழங்கி கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டு உள்ளார்.
Tags:    

Similar News