காணாமல் போன 154 கைபேசி கண்டுபிடிப்பு
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் காணாமல் போன 154 கைபேசியை கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் காணாமல் போன செல்போன்கள் அதனுடைய உரிமையாளரிடம் கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களில் பயன்பாட்டில் இருந்த கைப்பேசியை கண்டுபிடித்து தந்தார் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ராவ் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு காணாமல் போன கைபேசிகள் தொடர்பாக அனைத்து சட்ட ஒழுங்கு காவல் நிலையங்களிலும் பெறப்பட்ட புகார்களின் மீது மனு ரசீது அளித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்களின் மூலம் காணாமல் போன கைபேசிகளை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட இணை வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அளித்த பரிந்துரை கடிதத்தினை பெற்ற திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ராவ் உத்தரவுபடி இணைவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் மூலம் சுமார் 23 லட்சத்துபத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 154 கைப்பேசிகளை கண்டறிந்து விசாரணை செய்து ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த 127 கைப்பேசி ஆந்திரா 15 கேரளா 8 கர்நாடகா 4 ஆக மொத்தம் 154 கைபேசிகளை கண்டுபிடித்து அதனுடைய உரிமையாளரிடம் கொடுத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர்ந்து கைபேசி பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொது இடங்களில் செல்லும் பொழுது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் கஞ்சா போன்ற போதை பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது என்றும் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் தடுக்கும் வண்ணமாக காவல்துறை முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். கைபேசிகளை பெற்றுக் கொண்டவர்கள் மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர்.