சிவகாசியில் சாலையில் சுற்றி திரிந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம்
சிவகாசியில் போக்குவரத்துக்கு இடையூராகக சாலையில் சுற்றி திரிந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் சாலையில் மாடுகளை திரியவிட்ட உரிமையாளருக்கு ரூ.4ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.சிவகாசி மாநகரப் பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன.
இந்த நிலையில், மாநகராட்சி ஆணையா் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில்,சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் சிவகாசி சிறுகுளம் கண்மாய் ரயில்வே பீடர் பகுதியில் சுற்றித் திரிந்த 5 மாடுகளை பிடித்து தங்களது கண்காணிப்பில் வைத்திருந்தனர்.
தொடர்ந்து மாட்டின் உரிமையாளர் பள்ளபட்டி பகுதியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு ரூ.4ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது,மாநகராட்சியில் பொது இடங்களில் மாடுகளை திரிய விட்டால் காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அலுவலர் திருப்பதி எச்சரித்தாா்.