கோழிக்கழிவு ஏற்றி வந்த டெம்போவுக்கு அபராதம் !
கேரளாவில் இருந்து கோழிக்கழிவு ஏற்றி வந்த டெம்போவுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து டெம்பவை கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்த போலீசார்.
By : King 24x7 Angel
Update: 2024-02-23 05:39 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை சிலர் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வந்து கொட்டுவது வழக்கம். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் வந்து செல்லும் இதுபோன்ற வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடிப்பதும் அவற்றிற்கு அதிகாரிகள் அபராதம் விதிப்பதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தக்கலையில் இருந்து அதிவேகமாக சென்ற டெம்போவை சித்திரங்கோடு செக்போஸ்ட் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். டெம்போவை சோதனை செய்தபோது அதில் கெட்டுப்போன உணவு, கோழி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கேரளாவில் இருந்து கொண்டு வருவதும் தெரிந்து கொண்டனர். போலீசார் விசாரணை நடத்திய போது டெம்போவை ஒட்டி வந்த நாகர்கோவில் திடல் பகுதி சேர்ந்த ஆல்பர்ட் (45) இந்த கழிவுகளை வலியாற்று முகம் பகுதியில் கொட்டுவதற்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார். போலீசார் வேர்க் கிளம்பி பேரூராட்சி செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த அவர் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து டெம்பவை கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.