பூந்தமல்லி தனிக் கிளைச் சிறையில் கை விரல் அளவே கொண்ட செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்!!
பூந்தமல்லி கிளைச் சிறையில் கை விரல் அளவே கொண்ட செல்போன், சிம்கார்டு, மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 3 பேட்டரிகளை சிறைத்துறையினர் பறிமுதல் செய்தனர்.;
By : King 24x7 Desk
Update: 2024-07-11 09:56 GMT

Cell Phone
ஆம்ஸ்ட்ராங்க் படுகொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி கிளைச் சிறையில் கை விரல் அளவே கொண்ட செல்போன், சிம்கார்டு, மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 3 பேட்டரிகளை சிறைத்துறையினர் பறிமுதல் செய்தனர். சிறையில் குற்றவாளிகள் செல்போன் பயன்படுத்துவதாக எழுந்த புகாரையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், சிறையின் முதலாவது தொகுப்பின் படிகட்டின் கீழே இருந்த செல்போனை கண்டெடுத்த சிறைத்துறையினர் அளித்த புகாரில், கஞ்சா வழக்கில் கைதான மாறன், கொள்ளை வழக்கில் கைதான பாஸ்கர் ஆகியோரிடம் பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.