விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து

விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் மருத்துவ கழிவுகள் கொட்டிய இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புதுறையினர் போராடி அணைத்தனர்.;

Update: 2024-04-01 11:06 GMT

தீ விபத்து

விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் பின்புறம் மருத்துவ கழிவுகளும், குப்பைகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இங்குள்ள குப்பைகள் திடீ ரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வீசியதால் தீ மள மளவென எரிந்து அருகில் உள்ள குடோனுக்கும் பரவியதால் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த மருத்துவ பிளாஸ்டிக் கழிவுகள் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

Advertisement

இதனால் நெருப்பு ஜூவா லையுடன் வான்னோக்கி எழுந்த புகை மூட்டத்தை கண்டு நோயா ளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் அச்சம் அடைந்தனர் பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் சிலர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியாததால் இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் சிறப்பு உதவி நிலைய அலுவலர் ராஜவேலு தலை மையில் விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 3 மணி நேர போராட்டத்து பிறகு தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீவிபத்தால் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News