மேட்டூர் குப்பை கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து

சேலம் மாவட்டம் ,மேட்டூர் நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து.

Update: 2024-04-12 05:25 GMT

 தீ விபத்து

மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்குள்ள பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் நள்ளிரவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து கருமலை கூடல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
Tags:    

Similar News