தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

Update: 2024-06-12 06:38 GMT

ஒத்திகை பயிற்சி 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தென்மேற்கு பருவமழை காலங்களில் மீட்பு பணிகள் குறித்து, செயல்முறை விளக்கம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பருவமழை காலங்களில் குளம்,கிணறு, ஏரி,ஆறு,அணை, போன்ற நீர் நிலைகளில் நீர் நிரம்பிய நிலையில் உயிர்களையும், உடமைகளையும் எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்தும், நீரில் மூழ்கியவர்களையும், நீரில் அடித்துச் செல்பவர்களையும் எவ்வாறு மீட்பு பணிகள் செய்து காப்பாற்றுவது என்பது குறித்தும், தீ தடுப்பு குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் நிலைய அலுவலர் ஜே.ராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சியும் செய்து காண்பித்தனர்.

இதில் வருவாய்த்துறை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

Similar News