குப்பைக்கிடங்கில் தீ - புகைமூட்டத்தால் மக்கள் அவதி

Update: 2023-11-15 07:44 GMT
திருப்பத்தூர் குப்பைகிடங்கில்  தீ
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் அடுத்த ப.ஊ.ச.நகர் குடியிருப்பு பகுதியின் அருகில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது இந்த குப்பை கிடங்கில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் மர்மநபர்கள் குப்பை கழிவுகளுக்கு தீவைத்துள்ளனர். இதனால் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்து இப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் அருகாமை குடியிருப்பு வாசிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News