மின் கசிவு காரணமாக மரக்கடையில் தீ விபத்து

காட்பாடி அருகே மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள் எரிந்து சேதமானது.

Update: 2024-06-28 09:39 GMT

தீ விபத்து 

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் பகுதியில் வேலூரை சேர்ந்த ராஜ் பட்டேல் என்பவருக்கு சொந்தமான கீதா பிளைவுட் மரக்கடை செயல்பட்டு வருகிறது. கடையின் உள்ளே இருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் கடைக்கு வந்த உரிமையாளர் உள்ளே திறந்து பார்த்தபோது கடையில் உள்ளே இருந்த பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் .விசாரணையில் மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிந்துள்ளது.

Tags:    

Similar News