தீத்தடுப்பு மேலாண்மை விழிப்புணர்வு முகாம்!

பொன்னமராவதி அருகே தீத்தடுப்பு மேலாண்மை விழிப்புணர்வு முகாம்.

Update: 2024-03-19 06:58 GMT

விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, கொப்பனாபட்டியில் உள்ள மு.நாராயணன் செட்டியார் அரசு உதவி பெறும் பள்ளியில் வனத்துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, மருத்துவ துறை மற்றும் ஸ்டெப் அறக்கட்டளை சார்பில் தீத்தடுப்பு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடந்தது. வனச்சரக அலுவலர் ராமனாதன் தலைமை வகித்தார். பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் மணி கண்டன், டாக்டர் ராமராஜன், ஸ்டெப் அறக்கட்டளை இயக்குனர் பசுமை பாரதி, பள்ளி தலைமையாசிரியர் திருநாவுகரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வனப்பகுதியில் தீ ஏற்படுவதற்கான காரணங்கள், அதைதடுக்கும் முறைகள், தீ விபத்து ஏற்ப டும்போது செய்ய வேண்டிய முதலுதவி குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்க ப்பட்டது. வனத்தினால் ஏற்படும் நன்மைகள், வனத்தை அழிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி வனத்துறை அலுவலர்கள் எடுத்துரைத்தனர். வனவர்கள் இந்து மதி, கார்த்திக், ஜெயக்குமார், பல்லவி, வனக்காப்பாளர்கள் கனகவள்ளி, குணசேகரன், வனக்காவலர்கள் முதலியப்பன், யோகாம்பாள், ஊராட்சி தலைவர்கள் திவ்யா, ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News