பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த காலங்களில் ஊதியம் வழங்க வேண்டும்

பட்டாசு ஆலைகளில் வேலை நிறுத்த காலங்களில் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-27 14:34 GMT

பட்டாசு ஆலைகளில் வேலை நிறுத்த காலங்களில் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தொடர் பட்டாசு விபத்துகளை தவிர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு என்ற பெயரில் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் சிறு பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிகப்பட்டுள்ளதை கண்டித்து மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியிடம் கோரிக்கை மனு. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தப்பட்டு வருவதை கண்டித்து கடந்த 24ம் தேதி முதல் தமிழன் பட்டாசு மற்றும் கேப் படி உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவக்கியுள்ளனர்.

இச்சங்கத்தின் கீழ் இயங்கும் 150 பட்டாசு ஆலைகளை மூடப்பட்டுள்ள நிலையில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தனது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த சிறு பட்டாசு ஆலைகள் மூலம் ஆண்டிற்கு சுமார் 800 முதல் 1000 கோடி வரை உற்பத்தி நடைபெறுகிறது. இதனால் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதனை தமிழக அரசும், விருதுநகர் மாவட்ட நிர்வாகமும் கருத்தில் கொண்டு, விபத்தில்லா பட்டாசு தொழிலை உறுதி செய்ய வேண்டும், சிறுபட்டாசு ஆலைகளை மூடி தொழிலாளர்களின் வேலையை இழந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிஐடியுடன் இணைந்து 100 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர் கள் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு மாவட்ட ஆட்சியர் ஜெய சீலனை நேரிடையாக சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்

Tags:    

Similar News