வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை விபத்து: 10பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து 4 பெண்கள் 6 ஆண்கள் உள்ளிட்ட 10. பேர் உயிரிழந்தனர்
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ் பெற்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென மருந்துகள் வெடித்து சித்தறியதாக சொல்லப்படுகிறது.
இதில் 5 அறைகள் தரைமட்டமாகின.இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த 4பெண் தொழிலாளர்கள் மற்றும் 5 ஆண் தொழிலாளர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் அறிந்த சிவாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத்துறையினர்.விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.விபத்து குறித்து வெம்பகோட்டை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.