பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 தொழிலாளிகள் பலி

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.;

Update: 2024-01-25 06:29 GMT

விருதுநகர் ஆர் ஆர் நகர் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான தாளமுத்து என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமையுடன் சுமார் 30க்கும் மேற்பட்ட அறைகள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல பணியை தொடங்கிய போது மருந்து கலக்கும் அறையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த வெடி விபத்தில் மூன்று அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாயின.   மேலும் பட்டாசு ஆலையில் பணிபுரிந்த கன்னிச்சேரியைச் சார்ந்த காளிராஜ் (23) மற்றும் முதலிபட்டியைச் சார்ந்த வீரக்குமார் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் போர் மேன் சரவணகுமார் ( 24 ) சுந்தர மூர்த்தி (17) ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இந்த பட்டாசு ஆலை வடிவத்தை குறித்து வச்ச காரப்பட்டி காவல் நிலைய போலீசார் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News