விருதுநகர் அருகே பட்டாசு தயாரித்த போது விபத்து: ஒருவர் படுகாயம்

விருதுநகர் அருகே வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபததில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-01-25 12:44 GMT
வெடிவிபத்து நடந்த இடம் 

விருதுநகர் அருகே பவாலி கிராமத்தில் உள்ள காலனி பகுதியைச் சேர்ந்தவர செல்வம். இவருக்கு சொந்தமான வீட்டில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசு சரவெடி தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்கள் வைத்திருந்த நிலையில்,

அதே பகுதியைச் சேர்ந்த சின்னராஜி என்பவர் கம்பி கட்டும் இயந்திரத்தை இயக்கிய பொழுது அதில் உராய்வு ஏற்பட்டு அதிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் பட்டாசு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருள்கள் மீது எதிர்பாராதவிதமாக பட்டு வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் சின்னராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்த ன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆமத்தூர் காவல்நிலைய காவல் துறையினர் படுகாயமடைந்த சின்னராஜுவை ஆம்புலன் மூலம் விருதுநகர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  மேலும் இந்த வெடிவிபத்தில் வீட்டிலிருந்த வாஷிங் மெஷின் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும் இந்தவெடி விபத்து சம்பந்தமாக செல்வம் என்பவர் மீது ஆமத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News