மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்ட உதவி

மிக்ஜாம் புயலால் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் திருச்செங்கோட்டில் இருந்து முதல் கட்டமாக அனுப்பப்பட்டன.

Update: 2023-12-06 10:27 GMT

மிக்ஜாம் புயலால் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் திருச்செங்கோட்டில் இருந்து முதல் கட்டமாக அனுப்பப்பட்டன.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல பகுதிகள் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்களின் அன்றாட தேவைக்கு மக்கள் அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அங்கு வசிக்கும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், பொது மக்கள், என ஏராளமான தன்னார்வலர்கள் சார்பாக , முதற்கட்டமாக சுமார் 5 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, எண்ணெய் மற்றும் பெண்களுக்கான நாப்கின்கள் உள்ளிட்ட பொருட்கள், சட்டை-வேஷ்டி-துண்டுகள், தட்டுகள்,பிஸ்கட் மற்றும் கோரை பாய்கள் உள்ளிட்டவை லாரி மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அங்கிருந்து நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பப்படவுள்ளது. இந்த நிகழ்வின் போது, நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு,நகர மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, அண்ணாமலை, ரமேஷ், மனோன்மணி சரவண முருகன், ராஜா, புவேனேஸ்வரி உலகநாதன்,மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு என ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News