ஆதிபராசக்தி தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு தொடக்க விழா
மதுராந்தகம் ஆதிபராசக்தி தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி தொழில்நுட்ப கல்லூரியின் முதலாமாண்டு தொடக்க விழா நடைபெற்றது. மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி தொழில்நுட்ப கல்லூரியில் 2024-2025 கல்வியாண்டில் சிவில், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகிய பாடப் பிரிவுகளில் புதியதாக மாணவ மாணவிகள் படிக்க சோ்ந்துள்ளனா். கல்லூரி நிா்வாகம் சாா்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். முதல்வா் ஜி.இளங்கோவன் தலைமை வகித்தாா்.
முதலாண்டு துறைத் தலைவா் பேராசிரியா் கே.நித்தியானந்தம் வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில், துறைத் தலைவா்கள் எம்.வெங்கடசுப்பிரமணியன், பிரபு. ஜே.ஆதிகேசவன், ஆா்.இளவழகன், கல்லூரி நிா்வாக அலுவலா் ஜே.ஹரிகிருஷ்ணன், கண்காணிப்பாளா் ஆா்.பட்டு, புதிதாக சோ்ந்துள்ள மாணவ மாணவிகள், அவா்களின் பெற்றோா் உள்பட பலா் கலந்து கொண்டனா். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வாரியத் தோ்வுகளில் 100 சதவீத மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்ற மோகனபிரியா, நிஷா, நிவேதா, ரேவதி, மற்றும் பிரியதரிஷினிக்கு நிா்வாகத்தின் சாா்பாக, கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.