ஆனி மாத முதல் ஞாயிறு : நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்!

ஆனி மாத முதல் ஞாயிற்று கிழமையையொட்டி ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

Update: 2024-06-17 05:24 GMT

நாமக்கல் ஆஞ்சநேயர் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் நின்ற நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் ஞாயிற்றுக் கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடப்பதுண்டு. அதேபோல், நேற்று ஆனி மாத முதல் ஞாயிற்றுகிழமை, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம்.

நேற்று (ஜூன்-16) ஆனி மாதம் முதல் ஞாயிற்று கிழமையையொட்டி ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதில், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள்,பங்கேற்று சுவாமியை வழிபட்டுச் சென்றனர். நேற்று வழக்கத்திற்கு மாறாக ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Tags:    

Similar News