மீன் விதைப் பண்ணை: காணொளி காட்சியில் தமிழக முதல்வர் துவக்கினார்.

2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மீன் விதைப் பண்ணையை நவீனமயமாக்கும் பணியை காணொளி காட்சியில் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.

Update: 2024-03-08 12:40 GMT

2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மீன் விதைப் பண்ணையை நவீனமயமாக்கும் பணி.காணொளி காட்சியில் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, திருக்காம்புலியூர் பகுதியில் செயல்படும் மீன் விதை பண்ணையை மேலும் நவீனமயமாக்கும் வகையில் ரூபாய் 2 கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்ற முடிந்தது. இன்று அதற்கான பணியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் மீன் பண்ணையை பார்வையிட்டு, மீன் குஞ்சுகளை தொட்டியில் விட்டு பணிகளை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, மீன் பண்ணை உதவி இயக்குனர் ரத்தினம், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், மீன் பண்ணை ஆய்வாளர் ஜருபர்சாதிக் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News