மணப்பட்டி, மைலாப்பூரில் மீன்பிடி திருவிழா
மணப்பட்டி மற்றும் மைலாப்பூரில் நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளனமான கிராம மக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்.
Update: 2024-03-24 03:53 GMT
பொன்னமராவதி அருகே உள்ள மணப்பட்டி கிளசரங் கண்மாயில் கோடைக்காலத்தை முன்னிட்டும், நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், சாதி,மத பேதமின்றி மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டியும் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் மணப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு வலை, கூடை, ஊத்தா, கச்சா, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு கண்மாயில் இறங்கி மீன்பிடித்தனர். வலையில் கெண்டை, கெளுத்தி, அயிரை, விரால் உள்ளிட்ட நாட்டுவகை மீன்கள் சிக்கின. ]
இதேபோல் மைலாப்பூர் கிராமத்தில் உள்ள பிள்ளையான் கண்மாய், சின்ன ஊத்துக்கண்மாய் ஆகியவற்றில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு மீன்பிடித்தனர்.