மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது, மீன் பிடிக்க தயாராகும் மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து, மீனவர்கள் மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர்.

Update: 2024-06-15 13:05 GMT

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து, மீனவர்கள் மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர்.


தமிழக கடற்பகுதியில் மீன்வளத்தை பெருக்க, ஆண்டுதோறும் ஏப்., 15ம் தேதி முதல், ஜூன் 15ம் தேதி வரை, மீன்பிடி தடைக்காலத்தை, மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. இரண்டு மாதங்கள் நடைமுறையில் இருந்த இத்தடை, இன்றுடன் முடிகிறது. ஆழ்கடலில் மீன்பிடிக்கும், 'லாஞ்ச்' படகுகளுக்கே இத்தடை. செங்கல்பட்டு மாவட்டத்தின், 36 மீனவ பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், கரையோரம் மீன் பிடிப்பவர்கள் என்றாலும், தடையை கடைப்பிடித்தனர். தடைக்காலத்தில், மீன்பிடி படகுகளின் தேய்மானத்தை பழுதுபார்த்து, புதிய வண்ணம் தீட்டி பராமரித்தனர். கிழிந்த வலைகளை சரி செய்தனர். தடைக்கால நிவாரணமாக, லோக்சபா தேர்தலுக்கு முன், 7,801 பேருக்கு, தலா 8,000 ரூபாயை, தமிழக அரசு வழங்கியது. இன்றுடன் தடைக்காலம் முடிந்து, நாளை முதல் மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர்.
Tags:    

Similar News