புது மாரியம்மன் கோயிலில் ஐம்பெரும் விழா
பரமத்தி வேலூர் புது மாரியம்மன் கோயிலில் ஐம்பெரும் விழா கடந்த 17 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பரமத்தி வேலூர், பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் கோவிலில் சண்டிகா பரமேஸ்வரி மகா ஹோமம், 108 கலச பூஜை, திருவிளக்கு பூஜை, வலம்புரி மற்றும் இடம்புரி சங்க அபிஷேகம் மற்றும் லலிதா சகஸ்ர நாம லட்சார்ச்சனை உள்ளிட்ட ஐம்பெரும் விழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் மற்றும் மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் லலிதா ரஹஸ்ய சகஸ்ர நாம லட்சார்ச்சனை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
19 ஆம் தேதி காலை 7 மணிக்கு 108 கலச பூஜையும், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 11 மணிக்கு மகா ஆராதனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், மாலை 5 மணிக்கு திரிசதி அர்ச்சனையும், மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். நேற்று காலை 7 மணிக்கு மேல் 11 மணிக்குள் மகாலட்சுமி அம்சமான வலம்புரி மற்றும் மகா விஷ்ணு அம்சமான இடம்புரி சங்கு அபிஷேகமும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாலை 4 மணிக்கு சப்தசதி பாராயணமும் நடைபெற்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை கணபதி பூஜை, தீபபூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சூக்தஹோமம், ஆவஹந்தி ஹோமம், வித்யா ஹோமம், சண்டிகா பரமேஸ்வரி ஹோமம் மற்றும் அம்பிகைக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது . மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனையும், சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை மற்றும் படுக பூஜையும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவில் விழா குழுவினர், மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.