சாத்தூர் அருகே ஆதரவற்றோர் பள்ளி குழந்தைகளுக்கான ஐம்பெரும் விழா

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆதரவற்றோர் பள்ளி குழந்தைகளுக்கான ஐம்பெரும் விழா நடந்தது.

Update: 2024-02-14 10:35 GMT


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆதரவற்றோர் பள்ளி குழந்தைகளுக்கான ஐம்பெரும் விழா நடந்தது.


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள வெம்பக்கோட்டையில் சிபியோ உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் சுமார் 100 ஆதரவற்ற குழந்தைகள் தங்கி பயின்று வருகின்றனர். இப்பள்ளியை வெம்பக்கோட்டை ஊராட்சி தலைவர் நடத்தி வருகிறார். இப்பள்ளியில் பயிலும் ஆதரவற்ற குழந்தைகள் நடத்திய ஐம்பெரும் விழா நடைபெற்றது.

சிபியோ நூலக திறப்பு விழா, சிபியோ கல்வி கண்காட்சி திறப்பு விழா கல்வியை நோக்கி சிபியோ என்ற புத்தகம் வெளியீட்டு விழா மற்றும் குழந்தைகளின் விளையாட்டு விழா ஆண்டு விழா என ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிவகாசி மாநகராட்சி மேயர் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் வெம்ப கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர் மற்றும் வட்டாட்சியர் என பலரும் கலந்துகொண்டு குழந்தைகளை வாழ்த்தினர்.

முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்ட நூலக திறப்பு விழா மற்றும் கண்காட்சி திறப்பு விழாவில் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் திறந்து வைத்தார். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக நூலகம் அமைத்ததை அனைவரும் பாராட்டினர். மேலும் கல்வியை நோக்கி சிபியோ என்ற நூலை சிவகாசி மாநகராட்சி மேயர் வெளியிட முக்கிய பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

மாலையில் குழந்தைகளின் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இறுதியாக வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன அதனைத் தொடர்ந்து ஆதரவற்ற குழந்தைகளின் அருமையான கண் கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது ஊர் பொதுமக்கள் உள்ளூர் பிரதிநிதிகள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என பலரும் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தி சென்றனர்.

Tags:    

Similar News