கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் ஐந்து பேர் கைது!
கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் ஐந்து பேர் கைது.;
Update: 2024-07-05 05:01 GMT
காவல்துறை விசாரணை
ஆலங்குடி மாஞ்சான்விடுதி பிரிவு சாலையில் நேற்று மாலை ஆலங்குடி போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். இதில், இரு வேறு கார்களில் சோதனை செய்த போது ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இரண்டு பட்டாக்கத்திகள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கார்களில் வந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.